பொள்ளாச்சி-
கோவை தெற்கு மாவட்டம் திமுக முப்பெரும் விழா மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவை கொண்டாடும் வகையில்
ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி தலைமையில் ஓடையகுளம் பேரூர் கழக திமுக ஓடைய குளம் ரேக்ளா நண்பர்கள் இணைந்து நடத்தும் 500 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி ஓடையகுளம் பகுதியில் நடைபெற்றது,
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் கேராளவை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்
இப்போட்டிகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என போட்டிகள் நடைபெற்றது
இப்போட்டியில் கலந்துகொண்ட காளைகள் சீறி பாய்த்தது பார்பவர்களை மிரள செய்தது, இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி கண்டு மகிழ்ச்சி அடைத்தனர்,வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் தேவசனாதிபதி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் நிர்வாகிகள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கோப்பை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினர்
இதில் ஆனைமலை பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி மோகன் குமார் துணைத்தலைவர் கிருஷ்ணவேல் ஒன்றிய செயலாளர் யுவராஜ் , பிரகாஷ் சாந்தலிங்ககுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்