திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும்,தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அஇஅதிமுக அமைப்பு செயலாளருமான, திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதல் படி, வலங்கைமான் ஒன்றிய நகர அஇஅதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்,நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தமிழக அரசே சொத்து வரி உயர்வை ரத்து செய், நிர்வாக திறன் அற்ற பொம்மை முதல்வரே ராஜினாமா செய், கல்விக் கடனை ரத்து செய்,விலைவாசி ஏறி போச்சு,மின் கட்டணம் ஏறி போச்சு, சட்ட ஒழுங்கு கெட்டுப் போச்சு, குடிநீர் வரியை குறைத்திடு, கஞ்சா புழக்கம் பரவி போச்சு, மக்கள் விரோத ஆட்சி முடிய போகுது,மின் கட்டண உயர்வை ரத்து செய், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்து போன்ற கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெய. இளங்கோவன்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி,ஆர்.ஜி.பாலா,தொழுவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், மாத்தூர் குமார், மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.