தென்காசி அருகே இலத்தூர் விலக்கு பகுதியில் நேற்று இரவு தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் துறையினர் பாதிப்புக்குள்ளான தனியார் பேருந்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதை இடத்தில் பேருந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் இதனால் அதிகமாக பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்
விபத்துகளை தடுக்கும் பொருட்டு வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் இப்பகுதியில் செல்லும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்வதாலும் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி தீர்வு கண்டு விபத்துகள் இல்லா பயணத்தை பொதுமக்களுக்கு வழங்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்