நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாடு அக்.27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு கடந்த 25ஆம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதையடுத்து அக்.4ஆம் தேதி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சங்கரமடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.