தருமபுரி மாவட்டம், முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி, கீழ் ராஜா தோப்பில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் திருமணத்திற்கு ஊர் மக்கள் சார்பாக சுவாமிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாளுக்கு வைணவ சாஸ்திரப்படி திருக்கல்யாண உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டுசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.