கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதிநிகேதன் பன்னாட்டு பள்ளியில் தேசிய அஞ்சலக வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
இதை அடுத்துதொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவதையும் அதை மீண்டும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலும் 850 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் “எனது கனவு”என்ற தலைப்பில் தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினர்.
நிகழ்ச்சி பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அஞ்சலக அலுவலர் திருமதி நாகஜோதிநிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.முன்னதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவியர் அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்பொழுது மாணவர்களிடையே உரையாற்றிய சிந்தனை கவிஞர் கவிதாசன் கூறும் பொழுது நமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு கடிதங்கள் சிறந்த கருவியாக விளங்குகின்றது, மேலும் கடிதங்கள் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தார், விவசாயம், மின்சாரத்துறை, தொழில்நுட்பத்துறை,கிராமப்புற மாணவர்களுக்கு உரிய கல்வி வழங்குதல் போன்ற துறைகளில் நம் நாடு தன்னிறவு அடைய வேண்டும் என்று விரும்பினார்.
கலாம் உருவாக்கிய அக்னி, ஆகாஷ், ப்ரித்வி, திரிசூல் ஆகிய ஏவுகணைகளின் பெயர்களையே நமது மாணவர்களின் அணிக்கு பெயராக வைத்துள்ளோம் என்பது குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.நிறைவாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சச்சிதானந்தர் அஞ்சல் மன்ற நிர்வாகி ராஜசேகர் நன்றி கூறினார்.