பிரார்த்தனை”கவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழ்நாட்டில் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து குடியிருப்பு பகுதியிலும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்ததற்கு நன்றியும், பாராட்டுக்களும் கூறினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் வராமல் இருக்க நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அவரவர் வீட்டில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா மற்றும் பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள்.