மதுரை கோட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்வதாக புகார் எழுந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை யினர், ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர்,
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் இணைந்து அதிரடியாக மதுரை வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அனைத்து ரயில் நிலையத்திலும் சோதனை மேற் கொண்டுள்ளனர்.
ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன், மற்றும் கார்த்திகேயன், ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர், உத்தரவின் பேரில் திருநெல்வேலி ரயில்வே காவல் துணை கண் காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில்
விருதுநகர் ரயில்வே காவல் சரகம் ஆய்வாளர் செல்வி யின் மேற்பார்வை யில் உடன் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு சார்பு ஆய்வாளர்- சுடலை, விருதுநகர், வெடிகுண்டு தடுப்பு சோதனையாளர்கள் உடன் மோப்ப நாய்கள்,கொண்டு எளிதில் வெடிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் சிவகாசியில் தயாரிக்கப்படும் வெடிகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் ரயிலில் கொண்டு செல்கிறார்களா என்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.