பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் அறிவுறுத்தல்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், அக்.16- தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து வெடிபொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.
வெடிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், பட்டாசு சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். விற்பணை செய்யும் கடையின் அளவு வெடிபொருள் ஆகியவை விதிமுறைகளின்படி 296 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த அளவிற்கு மேல் அதிகளவு பட்டாசு விற்பனை செய்ய கூடாது. மாறாக எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசு கடையின் உள்ளே மின்சார வயர்கள் பிவிசி பைப்பினுள் செல்லுமாறு இருக்கவேண்டும். சீரியல் பல்புகளை பயன்படுத்தக்கூடாது. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம் இரண்டு வைக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் வைத்திருக்க வைக்க வேண்டும். முதல் உதவி பெட்டி அவசியம் இருக்க வேண்டும். இன்வர்டர் ,பேட்டரி கடையின் உள்ளே இருக்கக் கூடாது. பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசியம் தீயணைப்பான் கருவிகள் இயக்க தெரிந்திருக்க வேண்டும். பட்டாசு கடையில் சிறுவர்களை பணியில் அமர்த்த கூடாது. விதிமுறைகளின் படி பட்டாசு விற்பனை செய்து விபத்தில்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் , நிலைய அலுவலர் கணேசன், சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்பட்டால் உடனை இலவச தொலைபேசி எண் 112 மற்றும் 04362-238301, 9445086465 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.