இராஜபாளையம், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவி
ஏஏஎஸ்.பவித்ரா ஷியாம் முன்னெடுப்பில் நகரில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் மற்றும் ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகராட்சி ஆணையாளர் நாகராஜ், பொறியாளர்.ஷெரீப், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் இப்பணிகளை செயல்படுத்தி மேற்பார்வையிடுகிறார்கள்.
இதுகுறித்து நகர்மன்ற தலைவி கூறுகையில்.
பொதுமக்கள், குப்பைகளை ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டாமல் உரிய இடங்களில் போடவும். நகரை சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவும் நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி ஊழியர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்