முன்னாள் மாணவியர் கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் முன்னாள் மாணவியர் கூட்டமானது மணி அளவில் கல்லூரி உள் கலையரங்கில் இறைவழிபாட்டுடன் தொடங்கியது.

வரலாற்று துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவி அமைப்பின் தலைவர் முனைவர் A. ஜெஸிந்தா வில்வினா அவர்கள் வரவேற்புரை வழங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. சேசுராணி, கல்லூரிச் செயலர் முனைவர் R. சாந்தா மேரி ஜோஷிற்றா மற்றும் இல்லத்தலைமை அருட்சகோதரியும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் பாத்திமா மேரி சில்வியா இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழா சிறக்க வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியரும் முன்னாள் மாணவியுமான முனைவர் A.கோதைக்கனி தனது தலைமையுரையில், ஒவ்வொருவரும் வாழ்வில் சிறந்து விளங்க மூன்று படிநிலைகளை முன் வைத்தார்.

எல்லா சூழ்நிலையிலும் யாரையும் கடினப்படுத்தக் கூடாது, அனைவரையும் மதிக்க வேண்டும். நம்முடைய பணியை சரியாகச் செய்து மற்றவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

A.நந்தினி M.Sc., M.Phil., Stenographer, Grade 1, விருந்தினராகப் பங்கேற்று கடின உழைப்போடு. தங்களிடம் உள்ள சிறப்புத் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறப்பு சொற்பொழிவாற்றினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள், இன்னாள் மாணவிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்பு, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டன.

நிறைவாக, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவிகளின் இணைச் செயலா முனைவர் வே. புளோரா பவுலின் மேரி நன்றி நவில விழாவானது இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *