பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி நிறுவனர் பனை ஆனந்தன், மலேசியா தமிழர்களின் அழைப்பை ஏற்று
இன்டோன் ஹவுஸ் இன்டர்நேஷ்னல் பள்ளி ஆசிரியை திருமதி.கார்த்திகா பாலா அவர்கள் தலைமையில் மலேசியா நமது குடும்பம் – என்ற தமிழ் அமைப்பின் தலைவரும் செலங்கர், பது கவுஸ் பகுதியை சார்ந்த கவிஞர் சமூக செயல்பாட்டாளர், திரு. குணபதி ஆறுமுகம் என்ற கே.ஏ.குணா அவர்களின் அழைப்பை எற்று (19- 10 – 2024 அன்று) மலேசியா சென்ற பூரணாங்குப்பம் பனை பாதுகாப்பு குழுவினரை அன்புடன் வரவேற்று தன்னார்வளர்கள் அனைவருக்கும் அவர் எழுதிய புத்தகம் பரிசு வழங்கி சிறப்பித்தார் மேலும் தன்னார்வளர்கள் புதுச்சேரி இருந்து எடுத்து சென்ற பனை விதையினை அவரிடம் ஒப்படைத்து, பனை விதை எப்படி நட வேண்டும் என்பதை எடுத்துரைத்தோம். மேலும் உலகத் தமிழர்களின் வாழ்வியல் மரமான பனை மரத்தின் அவசியத்தை எடுத்துரைத்து அங்கு பனை விதைகளை விதைக்க இடம் தேவை என்று கூறினோம். அவர் விரைவில் மலேசியா வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து அவர்கள் உதவியுடன் அழிந்து வரும் நமது பனை மரத்தினை மலேசியாவில் வளர்க்க அரசிடம் கலந்து ஆலோசித்து இடம் தேர்வு செய்து கொடுக்கிறேன் என்று எங்களிடம் உறுதி அளித்துள்ளார் நிகழ்ச்சியில் மலேசியா வாழ் தமிழர்கள் திருமதி மாலா, சுரேஷ், பழனி, ஆகியோர் கலந்து கொண்டனர் , உடன் கற்பகம் ஆனந்தன் சதீஷ், வண்டிமுத்து, பாலச்சந்தர், லெனின்,ஸ்டீபன் ராயப்பா, அப்துல்காதர், ரவிச்சந்திரன், அன்பு ராமச்சந்திரன், கோபிநாத், எழிலரசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *