காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 22.10.2024 இன்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற குழுவினர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்கள். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் .சந்திரமோகன் , அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் .இளங்கிள்ளிவளவன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என்ற காவலர்கள் உடன் இருந்தனர்.