ராஜபாளையம்
எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி தாளாளர் எ.கே .டி .கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார்.மாணவிகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்படவேண்டும்
என்றும் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடினர்.தாளாளர் அவர்களின் தாயார் ,கல்லூரி தலைவர் ,நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முதல்வர் முனைவர்.ஜமுனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். அனைத்து துறை தலைவிகளும் தங்களுடைய துறை மாணவிகளின் சாதனைகளை எடுத்துரைத்தனர் .துணை முதல்வர் முனைவர் .மஞ்சுளா தேவி நன்றியுரை கூறினார் .