கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மழை காலங்களில் தொடர்ந்து மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளி நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
அதன் வகையில் இன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆலோசனைப்படி போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா உத்தரவின் பேரில் பட்டகரஅள்ளி ஏரியிலிருந்து அகரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு டிராக்டர் மூலம் மண் கொட்டப்பட்டு வருகிறது
இதில் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, தட்ரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், மற்றும் நாகரசம்பட்டி வருவாய் ஆய்வாளர் உஷா, கிராம நிர்வாக அலுவலர் சுவேந்திரன் மற்றும் கிராம உதவியாளர் குமரேசன்,பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணை தலைவர் உறுப்பினர்கள், ராஜா, சாரதி,கார்த்தி, சரண்யாசத்தியமூர்த்தி மற்றும் தருமன் கருப்பண்ணன் சக்கரவர்த்தி ஜலபதி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்