தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் கிழக்கு பகுதி செயலாளரும் , முன்னாள் துணை மேயருமான பி. சேவியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஜோஸ்வா அன்பு பாலன் , மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் வசந்த், வட்டச் செயலாளர்கள் சுயம்பு, சங்கர், சந்திரசேகர், கென்னடி, அண்டோ, இந்திரா, பகுதி கழகப் பொருளாளர் மதன் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜேடியம்மாள், வட்ட அவைத் தலைவர் அமல்ராஜ், பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாம்ராஜ், பகுதி மகளிர் அணி செயலாளர் ஷாலினி ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.
மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெ.ஜெ. தனராஜ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் தமிழகத்தில் மீனவ மக்களுக்கு அதிக நலத்திட்டங்களை செய்த அரசு அதிமுக தான் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் சம்பவத்தை திசை திருப்பி மீனவ மக்களுக்கும் அதிமுகவுக்குமான உறவில் பிளவை ஏற்படுத்தியது திமுக என்றென்றும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரே இயக்கம் அதிமுக