திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியில் நேற்று இரவு 58 மில்லி மீட்டர் கன மழை பெய்தலின் எதிரொலியாக பாபநாசம்- குடவாசல் சாலை, கும்பகோணம்- மன்னார்குடி சாலை இணையும் கடைவீதியின் மையப் பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வலங்கைமான் பேரூராட்சி மன்றம் சார்பில் சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் சில மணி நேரத்தில் அப்புறப்படுத்தினார்கள். சாதாரண சிறிய மழைக்கு கூட தண்ணீர் தேங்கும் இப்பகுதிக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.