மதுரை சேக்கிபட்டி , அரசு பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி……
மதுரை மாவட்டம், சேக்கிபட்டி , அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சிங் நடைபெற்றது. தலைமையாசிரியர் மணிமொழி தலைமை தாங்கினார். ஆசிரியர் கோமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் தலைமையாசிரியர் சரவணன் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது புத்தகங்கள் மனமாற்றத்தை ஏற்படுத்தும் நூல்கள் நற்பண்புகளை வளர்க்கும். இளமையில் நூலகம் சென்று படிக்கும் ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும். செய்தித்தாள் தினமும் படிக்க வேண்டும். உரையாடல் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.
ராஜேந்திரன் தமிழ்கூடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் முத்துக்குமார், பரமேஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுந்திரபாண்டியன் நன்றி கூறினார். தமிழாசிரியர் நவநீதன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.