வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர்அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமையில், அன்னை இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு வலங்கைமான் வட்டார சேவா தள தலைவர் கே. என். ஆர். இளங்கோவன் மலர்மாலைஅணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஆட்டோ சங்க துணைச் செயலாளர் ஜாலி மற்றும் செந்தில், மணிமாறன்,அப்துல் ரகுமான் மற்றும் தொழிற்சங்கத்தினர், கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு இரும்பு மங்கை அன்னை இந்திராவின் செயல்களை பற்றி பேசி அவர்களுக்காக அஞ்சலி செலுத்தி,வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தனர்.