கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே
பாபநாசத்தில் உள்ள மேட்டுத் தெருவில் காவிரி அரசலாறு தடுப்பணை தலைப்பு பகுதியில் ரூ.146 கோடிக்கு கட்டப்பட்ட பாலம் தடுப்பணை பலகையின் மேலே உள்ள தடுப்பு இரும்பில் திடீர் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் பரப்பரப்பு நிலவியது ……

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள மேட்டுத்தெரு காவிரி அரசலாறு தடுப்பணை தலைப்பு பாலம் ரூ. 146 கோடிக்கு ரூ.146 கோடிக்கு கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பணை பலகையின் மேலே உள்ள தடுப்பு இரும்பில் திடீர் உடைப்பு ஏற்பட்டு
உள்ளது .
மேலும் பத்து நாட்களுக்கும் மேலாக தடுப்பு பலகையில் மேலே உள்ள இரும்பு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும்,
மேலும் ,உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.