அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லனை கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஏழேந்தல்சாமி, மலையம்மாள், கருப்புச்சாமி, கோவிலில் 48 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் கோபூஜை, புண்யாவாஜனம், குல தெய்வ அனுக்கிரகம், நவகிரக ஹோமம், மகா சாந்தி யோகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
கோவிலுக்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராம பொது மக்களுக்கு பூஜை பொருள்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை நாட்டாமை வகையறாக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.