திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம் ஹெச் ஜவாஹிருல்லா பேட்டி…
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாய்ஹுல்லா திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின்போது தெரிவித்ததாவது அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததை 2006 இல் மத்திய அரசு ரத்து செய்தது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு ரத்து செய்து சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பில் மத்திய அரசின் ஒற்றை காரணத்தினால் சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என நீதியரசர்கள் கூறியது வரவேற்கதக்கது என்றார்

அமரன் திரைப்படம் மிக மோசமாக ஒரு மாநிலத்தின் உரிமைக்காக போராடக் கூடியவர்களை சித்தரித்து இருக்கிறது காஷ்மீரின் உண்மை நிலையை அந்தப் படம் எடுத்துக்காட்ட தவறி இருக்கிறது அந்தப் படத்தில் ஹீரோ முக்குன் அவர்களின் தியாகத்தை போற்றுகிறோம் நிச்சயமாக அவர் ஒரு மாவீரர் தான். ஆனால் தமிழ்நாட்டில் சார்ந்த ஏராளமானோர் கார்கில் யுத்தத்திலும் சரி அதே போன்று இன்னும் பிற யுத்தங்களில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டினத்தைச் சார்ந்த சிறுபான்மையினத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லாம் தங்களது வீரர்களையும் தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தினுடைய நாயகி பெறக்கூடிய துன்பங்களுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா? நிலை அறியாமல் வாழக்கூடிய காஷ்மீர் பெண்களுடைய நிலை ஆக ஒரு பக்கம சார்பாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது இதனால்தான் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்

எடப்பாடி பழனிச்சாமி இந்த அரசை விமர்சிக்க வேண்டும் என்ற ஒரு கெட்ட நோக்கத்தோடு விமர்சனத்தை செய்து இருக்கிறார் அதற்கு நேர் மாற்றமாக தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை இந்த அரசு எடுத்து வருகிறது அது வேளாண்மை துறையாக இருந்தாலும் சரி கல்வி துறையாக இருந்தாலும் சரி தொழில் துறையாக இருந்தாலும் சரி இப்படி பல்வேறு துறைகளில் நம்முடைய முதலமைச்சர் சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது எங்களைப் பொறுத்த வரைக்கும் இந்தியாவில் ஒருங்கிணைந்து ஒரு இந்தியா கூட்டணி என்று ஒரு கூட்டணி அமைத்து அதன் உறுதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் நாங்கள் பயணித்து வருகிறோம் இந்த கூட்டணி கடந்த காலத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது 2026-ல் வெற்றி பெறும்

கடந்த மூன்று ஆண்டுகளில் 3000 கொலைகள் உள்ளிட்ட குற்ற சம்பவம் நடந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும் போற போக்குல இந்த மாதிரி புள்ளிவிவரங்களை சொல்லக்கூடாது சமீபகால தமிழக வரலாற்றில் கடந்த ஆட்சி காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காக்கா குருவியை சுட்டது போல் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை அது அதிமுக ஆட்சியில் தான் நடந்திருக்கிறது

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற கேள்விக்கு அதிகாரத்தில் கூட்டணி கட்சியில் இருக்கக்கூடியவர்கள் பெரும் அமைச்சர்களாக இருந்தால் மட்டும் தான் அதிகாரத்தில் பங்கு என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ஒரு ஆட்சியில் இருக்கும் பொழுது பல்வேறு துறைகள் இருக்கிறது அந்த துறைகளின் உடைய உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் தலைவராக முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி இருக்கிறார் அது ஒரு அதிகார பகிர்வு தான் அதேபோல சிறுபான்மை ஆணையம் இருக்கிறது இதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வாரியங்களுக்கு கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் தலைவர்களாக உறுப்பினர்களாக இருக்கிறார்கள் இதெல்லாம் அதிகார பகிர்வு தானே

பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை நல்ல மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு சேர்ப்பது பாஜகவுக்கு நலம் வைக்கும் என சொல்ல விரும்புகிறேன் என பேட்டி அளித்தார். நிகழ்வில் மாவட்டத் தலைவர் எம் முஜிபுர் ரஹ்மான் விவசாய அணி துணைச் செயலாளர் ஹெச். நவாஸ் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பொதக்குடி குத்புதீன் மாவட்ட பொருளாளர் நியாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஹாஜா அலாவுதீன் மாவட்ட விவசாய அணி செயலாளர் கருப்பூர் குத்புதீன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன் தாவூத் நூருல்லா நகர தலைவர் கலீல் ரகுமான் கிளைத் தலைவர் செய்யது இப்ராஹிம் உள்பட மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *