திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சமுத்திராப்பட்டி கிராமத்தின் இடுகாடு, திருமணிமுத்தாற்றின் கரையில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை, இடுப்பளவு நீரில் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள பொதுமக்கள், திருமணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தருமாறு நீண்ட காலமாக கோரி வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நிறைவேற்றப் படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.