நாகப்பட்டினம் மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ நவநீத ஈஸ்வரர் சுவாமி ஆலயத்தில்ஸ்ரீ சிங்காரவேலவர்சன்னதியில்கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டுநவம்பர் 1ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 11ஆம் தேதி வரை திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக நாகை
மாவட்ட நிர்வாகம் & வட்டாரம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார திட்டம் வடுகச்சேரி ஆகியோர் இணைந்து நடத்திய சுகாதார முகாம் பத்து நாட்களாக நடைபெறுகிறது.
காலை மாலை குப்பைகளை அகற்றுதல்,பீலிச்சிங் பவுடர் போடுதல், குடற்புழு மாத்திரைகள் நோய் தடுப்பு மாத்திரைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.மேலும் நடமாடும் மருத்துவமனை ஊராட்சி முழுவதும் சுற்றி வருவது வழக்கம். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் அங்கங்கே கொசு ஒழிப்பு திட்டம் அடிப்படையில் புகை மருந்து இயந்திரம் மூலம் பரப்பி வந்தனர்.
இம்முகாமில் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் மரு.பிரதீப், வி. கிருஷ்ணகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் சி.செந்தில்குமார்,எம்.சுந்தானந்த கணேஷ்
மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நிருபர் ஜி. சக்கரவர்த்தி
: 9788341834