தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூத்து பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வரும் உதயகுமார் என்பவர் கடந்த வருடம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சூரியகுமார் என்ற நபரிடம் நெல் கொள்முதல் செய்துவிட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் திருப்பி கொடுத்து பாக்கி பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை உதயகுமாரின் ரைஸ்மில்லிற்கு காரில் வந்த சூரியகுமார், சுரேஷ். ஹரி கிருஷ்ணன், பிரதிபன் மற்றும் இருவர் உதயகுமாரிடம் பிரச்சனை செய்து உதயகுமாரின் காருடன் அவரை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து உதயகுமாரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தனலட்சுமி நகர் சங்கர் என்பவரின் மகன் சூரியகுமார் (31), பண்ருட்டி வில்வா நகர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிரு்ணன் மகன் சுரேஷ் (39). கடலூர் புதுப்பாளையம் படைவீட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவ சண்முகம் மகன் ஹரிகிருஷ்ணன் மற்றும் விராலிமலை மேலப்பட்டகுடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நவநீத குமார் என்பவரின் மகன் பிரதீபன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *