கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் தமிழ்நாடு சேப்டர் இணைந்து நடத்தும் ச சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு சேப்டர் RSSDI இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் .பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ரமேஷ் பாபு, டாக்டர். பழனிவேல், லியோன் சேவியர் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில் சேதுராமன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள்,300க்கும் மேற்பட்ட பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் கையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பதாகைகளுடன் மகாமகக் குளக்கரையில் இருந்து பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.