சாதாரண மக்களின் நலன்களுக்கு எதி்ராக மத்திய அரசு செயல்படுவதாக கோவையில் ஐ.என்.டி.யூ.சி.தேசிய தலைவர் சுவாமி நாத் ஜெய்ஸ்வால் விமர்சனம்
மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாகவும்,குறிப்பாக நாட்டில் விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.என்.டி.யூ.சி. தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வால் கோவையில் தெரிவித்துள்ளார்..
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான,
ஐ.என்.டி.யூ.சி. தேசிய தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வால் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்போது பேசிய அவர்,கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெறும் மக்களவை இடைத்தேர்தலி்ல் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து வாக்கு சேகரிக்க தாம் வந்துள்ளதாக கூறிய அவர்,மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறினார்..
இதனால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்களின் மீது வரி சுமையை சுமத்துவதிலேயே மோடி அரசு கூடுதல் கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டினார்..
தொழில் துறைகளை மேம்படுத்துவதில் அக்கறை இல்லாமல்,தொழிலதிபர்களை வளர்த்து விடுவதிலேயே மோடி தற்போது செய்து வருவதாக அவர் கூறினார்..
ஏழை விவசாயிகள்,இளைஞர்கள்,ஏழை மக்களின் எதிா்காலத்தை சிதைப்பதையே மத்திய அரசு விரும்புவதாகம், மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சாதாரண மக்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக அவர் கூறினார்..
முன்னதாக கோவை விமான நிலையம் வந்த அவருக்கு ஐ.என்.டி.யூ.சி.சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..