கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது
மேலும் அதிமுக வருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற தைரியத்தோடு அதிமுக இயக்கத்தை வழிநடத்த வேண்டும் எனவும்,
தமிழகத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் மீடியாக்களை மட்டும் வைத்து தான் ஆட்சி செய்கிறார்கள் என்றும், மீடியாக்கள் மட்டும் தான் ஆட்சியாளர்களை தாங்கி பிடித்து உள்ளதாகவும் அவர்கள் விட்டுவிட்டால் ஆட்சி கீழே விழுந்து விடும் என்றும்,
மேலும் திமுக தமிழகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதால் 2026 தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும்,எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் பதில் கூற முடியாமல் திணறுகிறார் என்று
கும்பகோணத்தில்..முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் .காமராஜ் பேச்சு…..தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கும்பகோணம் ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்….,தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது மேலும் அதிமுக வருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற தைரியத்தோடு அதிமுக இயக்கத்தை வழிநடத்த வேண்டும் எனவும்,2026-ல் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும்,வருகின்ற 2026 தேர்தலில் 2கோடி 30 லட்சத்து மேற்பட்ட வாக்குகளை அஇஅதிமுக பெற்று விடுவோம் என்றும்,தமிழகத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் மீடியாக்களை மட்டும் வைத்து தான் ஆட்சி செய்கிறார்கள் என்றும், மீடியாக்கள் மட்டும் தான் ஆட்சியாளர்களை தாங்கி பிடித்து உள்ளதாகவும் அவர்கள் விட்டுவிட்டால் ஆட்சி கீழே விழுந்து விடும் என்றும்,
மேலும் திமுக தமிழகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதால் 2026 தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும்,
எடப்பாடியார் கிளைச் செயலாளராக இருந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆனவர் என்றும் திமுகவின் ஸ்டாலின் கருணாநிதி மகன் என்பதால் மட்டுமே தான் முதலமைச்சராக ஆகியுள்ளார் என்று எடப்பாடி கேட்டதற்கு ஸ்டாலின் ஏதோ பொய் சொல்கிறார் என்றும் வெறுப்பில் பேசுகிறார்கள் என்றும் இன்றுவரை பதிலளிக்க ஸ்டாலினால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார்….
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநகரச் செயலாளருமான ராமநாதன் , தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே பாரதிமோகன், சோழபுரம் அறிவழகன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ வி கே அசோக்குமார், மற்றும் மகளிர் அணியினர் மாவட்ட, ஒன்றிய, மாநகர கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.