தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார் இந்த தண்ணீரின் மூலம் ராயப்பன்பட்டி கோகிலாபுரம் அணைப்பட்டி வாய்க்கால் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கியமாக நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் உள்பட நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்