கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் தலைகவசம் விழிப்புணர்வு பேரணி….

மாவட்ட ஆளுநர் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் விலையில்லா தலைக்கவசம் வழங்குதல் மற்றும் தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆளுநர் சவரிராஜ் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணி மகாமகக் குளக்கரையில் இருந்து கிழக்கு காவல் நிலையம் வரை இருசக்கர வாகனத்தில் 50-திற்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்தவாறு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து துறை காவலர்கள் ,லயன்ஸ் சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.