வலங்கைமான் வட்டாரத்தில் ஓட்டு சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடக்கிறது.
அதன்படி வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆம் தேதிகளில் ஓட்டு சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று (16-ஆம் தேதி), இன்று (17-ஆம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடம் மாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றிற்கான படிவங்கள் மற்றும் பூர்த்தி செய்த படிவங்களை வழங்குதல்
உள்ளிட்ட பணிகள் ஓட்டு சாவடி மையங்களில் நடைபெற்றது.
வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டு சாவடி மையத்தில் வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன் பார்வையிட்டார், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், திமுக ஒன்றிய பிரதிநிதி சிங்கு தெரு எஸ்.ஆர். ராஜேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.