ஓ.என்.ஜி.சி சார்பில் நெகிழி மாற்று கண்காட்சி
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாத கட்டுபாடு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகள் தயாரித்த பிளாஸ்டிக் மாற்று பொருட்களை பார்வையிட்டு பொருட்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாலம் தொண்டு நிறுவனம்,
காரைக்கால் காவேரி அசட் ஓ.என்.ஜி.சி சார்பில் திருவாரூர் வட்டாரம் தண்டலை ஊராட்சியில் செயல்படுத்தி வருகிறது .இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உட்பட ஊராட்சியில் தேங்கியிருந்த மூன்றுடன் பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகள், கடைகளிலும் பிளாஸ்டிக் மாற்றாக மஞ்சள் பை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் மாற்று பொருளாக பனைப்பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைவரும் அறியும் வகையில் இந்த கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கராஜ் , மாவட்ட மறுவாழ்வு அலுவலர் புவனா, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் ஆகியோர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார். ஆகியோர் செய்திருந்தனர்.