அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததையோட்டி நேற்று 48ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளும், தீபாரானையும் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கருவறையில் அமைந்துள்ள அம்மன் உருவப்படத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆதனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.