கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் சிறந்ததொரு கல்வி நிறுவனம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி நிறுவனம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
இந்தப் போட்டிகளில் ஒன்பது கல்லூரிகளின் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர் இந்தப் போட்டியில் பங்கேற்ற கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தனர்.
கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பும் என்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது
இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜி வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த விழாவில் கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கல்லூரி உட ற் கல்வி ஆசிரியர் ஆர் சூரிய பிரபா உடற்கல்வி பொறுப்பாளர் எஸ் சுசிலா உள் பட கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் தங்களின் இந்த வரலாற்று சாதனை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தி பாராட்டி பேசினார்கள்.