டிசம்பர் 6 திருப்பூரில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் கோவையிலிருந்து 2000 மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்…
தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன்.அறிக்கை..
டிசம்பர் 6 வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரியும் வக்பு சொத்துக்களை பாதுகாக்க கோரியும்.. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 10 மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்தில் எதிர்வரும் டிசம்பர் 6 அன்று மாலை 4.00 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் அழைத்து செல்வதென கோவை மத்திய மாவட்டம் செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் சர்புதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப்புரஹ்மான்.மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம். தமுமுக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன்.தமுமுக மாவட்டத் துணைத் தலைவர் அப்பாஸ். தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் நூர்தீன். பைசல் ரகுமான். அசாருதீன்.மமக மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஷாஜகான். ஆஷிக் அகமது.அபு. ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள்
எதிர்வரும் டிசம்பர் 6 போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் ஜமாத்தார்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் கோவையிலிருந்து அழைத்து செல்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..