கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொடியேற்று விழா …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொடியேற்று விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோ தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மாகாலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி முபாரக், பேரூராட்சி மன்ற தலைவர் புனிதபதி குமார், துணைத் தலைவர் அழகேசன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய பேரூரர் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்