வலங்கைமான் கடைத்தெரு ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் 44 -வது நாள் மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் அக்டோபர் மாதம் 22- ஆம் தேதி தொடங்கி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று ( 3-ஆம் தேதி) 44- ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜைகளை சேங்காலிபுரம் சர்வ ஜாதகம் “வைகாநச ஆகம பிரவீண” ஆர். பாலாஜி பட்டாச்சாரியார், ஆலய பட்டாச்சாரியார் எஸ். பாஷியம் ( எ) சுந்தர்ராஜன் ஐயங்கார் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பாடகருமான ப. ராஜேந்திரன் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உபயதாரர்கள், பக்தர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் டி. சீதாராமன், அறங்காவலர் எஸ். லட்சுமண சாமி மற்றும் பத்மசாலியர் சமூகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.