கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாபநாசம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பாக அதிமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை.சண்முகபிரபு மாவட்ட அவை தலைவர் ராம்குமார் நகர செயலாளர் சின்னையன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று காய்கறி மார்க்கெட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.