பெரம்பலூர் அருகே குரும்பலூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 8- ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குரும்பலூரில் அதிமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
முன்னதாக முன்னாள் மாவட்ட பிரதிநிதி கணேசன். 15வது வார்டு கிளை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் செல்வி நகர துணை செயலாளர் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.