எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்குடன் செல்லும் வாகனங்கள்.வெண்நிறத்தில் தோன்றிய சூரியன்.

ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடந்த வாரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில் தற்போது மூன்று நாட்களாக தொடர்ந்து கடும் பனிப்பொழிவு இருந்து. வருகிறது.
சீர்காழி சுற்று வட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், கொள்ளிடம்,திருமுல்லைவாசல், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இரவு நேரங்களில் பனி பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. காலை கடும் பனி பொழிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி பெய்வதால் அனைத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றன.மழை பெய்து ஓய்ந்த நிலையில் தற்போது பனி பொழிவதால் இளம் சம்பா பயிர்களில் நோய் தொற்று ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் காலையில் தோன்றிய சூரியன் வெண் நிறத்தில் தாமதமாகவே தோன்றியது.