விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது..

பத்திரிக்கை, ஊடகம் மற்றும் பிற துறை தொடர்பான விளம்பர துறையில் டிஜிட்டல் தொடர்பான விளம்பர உத்திகள் தற்போது புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பான புதிய தொழில் நுட்பங்களை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்..

இதற்கான நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள .பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தி ஹிந்து குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி நவ்னீத்,பிரிட்டன் ரீட்ஸ் பெக்கட் பல்கலைகழகத்தின் ஜர்னலிசம் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சான் டாட்ஸன் ஆகியோர் கலந்து கொண்டு விளம்பர துறையில் மாறி வரும் பரிணாமங்களை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினர்..

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் அகாடமியுடன் இணைந்து பி.எஸ்.ஜி.
மேலாண்மை கல்லூரி விளம்பரம் தொடர்பான புதிய சான்றிதழ் பாடத்திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது..
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் அகாடமி இயக்குனர் ராமகிருஷ்ணன், கிளப் தலைவர் சிவகுமார், பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் வித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *