திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக சார்பில் திருவாரூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் திருவாரூரில் திருவாரூர் நகராட்சி இரண்டாவது வார்டு உட்பட்ட மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் அமைந்திருந்த கடந்த மார்ச் ஒன்றாம் தேதி 1990 வது ஆண்டு நிறுவப்பட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவ சிலை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்க பணிகளினால் மாற்று இடத்தில் இருந்த புரட்சித்தலைவர் திருவுருவ சிலையை மீண்டும் அதே இடத்தில் புதியதாக சிலையையும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலையையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் இரண்டாவது வார்டு கழக நகர மன்ற உறுப்பினர் மலர்விழி கலியபெருமாள் அவர்களின் ஏற்பாட்டில் புதியதாக நிறுவப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் பசி போக்கிய தலைவர்களுக்கு கழக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் திருவாரூர் நகரக் கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வின்போது மாவட்ட இணை செயலாளர் மாவட்ட கழக பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் திருவாரூர் நகரக் கழக செயலாளர் ஆர்டி மூர்த்தி திருவாரூர் ஒன்றியக் கழக செயலாளர்கள் தெற்கு பிகேயு மணிகண்டன் வடக்கு ஜி எஸ் செந்தில்வேல் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை எஸ் கலியபெருமாள் வர்த்தக அணி ரயில் டீ பாஸ்கர் தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல தலைவர் தியாகராஜன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி சின்ராஜ் திருவாரூர் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் எம்ஜிஆர் கருப்பையன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கூரியர் மதிவாணன் மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் ஜி பி சூர்யா சாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தனபால் உள்பட நகர ஒன்றிய கிளை வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் நகர ஒன்றிய உட்பட்ட அனைத்து சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளான நன்னிலம் பேரளம் குடவாசல் வலங்கைமான் கொரடாச்சேரி கூத்தாநல்லூர் மன்னார்குடி கோட்டூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நகர ஒன்றிய பேரூர் கிளை வட்ட கழக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்