தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி வணிகவியல் மட்டும் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மென்பொருள் ஆலோசனையில் நிதி நிபுணர்களின் பங்கு, கணக்காளர்களின் வளர்ந்து வரும் பங்கு பரிமாற்றத்திலிருந்து மேலாண்மை நோக்கிற்கு மற்றும் வணிகத்திற்காக ஜி எஸ் டி நடைமுறைகள் போன்ற தலைப்புகளில் பன்னாட்டு அளவிலான மாநாடு டிசம்பர் 4,2024 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டினை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சேசுராணி செயலர் அருட்சகோதரி முனைவர் சாந்தா மேரி ஜோஷிதா மற்றும் மதர் சுப்பீரியர் அருட்சகோதரி முனைவர் பாத்திமா மேரி சில்வியா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக வணிகவியல் மற்றும் கணினி பண்பாட்டுத் துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் லாவன்யலக்ஷ்மி வரவேற்புரையாற்றினார். பின்னர் அதில் நவீன கவனத்துடன் தொழில்நுட்ப மாற்றத்தை கையாளும் திறனை வணிகங்கள் பெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். முதல் அமர்வில் ஜெயஸ்ரீ பாலசுப்ரமணியம் சேட்டர்டு அக்கௌன்டன்ட் அவர்களும் இரண்டாம் அமர்வில் முனைவர் எஸ் ராஜேஸ்வரி உதவிப்பேராசிரியர் அவர்களும் மூன்றாம் அமர்வில் முனைவர் பி. சியாம் சுந்தர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். பல்வேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒளி ஒலி மூலமாக பகிர்ந்து கொண்டனர். இந்த பன்னாட்டு அளவிலான மாநாட்டில் பங்கு பெற்ற மாணவர்கள் பயன் பெற்றார்கள். இறுதியாக எம்.சுதந்திரா தேவி உதவிப்பேராசிரியர்
நன்றியுரை வழங்கினார். இந்த கருத்தரங்கம் தொழில் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை குறித்து பயனுள்ள தகவல்களை வழங்கி பலதுறைகளை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்புக்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.