கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் மில்க்கி மிஸ்ட் (MILKY MIST) தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவங்கியது…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பால் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனையில் தென்னிந்திய அளவில் முன்னனி நிறுவனமாக மில்க்கி மிஸ்ட் செயல்பட்டு வருகின்றது.

பால் பொருட்கள் மட்டுமின்றி பீட்சா,சீஸ் பொருட்கள்,
சாக்லேட்,ஐஸ் கிரீம் ரசகுல்லா, ரசமலாய், போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மில்க்கி மிஸ்ட்,தனது விற்பனை சந்தையை விரிவாக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிரத்யேக நேரடி விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை நேரு நகர் பகுதியில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியுள்ளது..

ஜூபனல் குழுமம் துவங்கியுள்ள மில்க்கி மிஸ்ட் பார்லர் துவக்க விழாவில்,,மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சஞ்சய் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய விற்பனை மையத்தை திறந்து வைத்தனர்..

இந்நிகழ்ச்சியில் ஜூபனல் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் நேரு நகர் மில்க்கி மிஸ்ட் பார்லரின் உரிமையாளரும் ஆன ஆர்த்தியா அனைவரையும் வரவேற்றார்..

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரத்னம் ,இந்த நவீன வகை பார்லரில், பனீர், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி, நெய், லஸ்ஸி, கிரீம், பாயாசம் உறைந்த பீட்சா,புரோட்டா, மற்றும் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் அசல் எனும் பிராண்டின் புட்டு பொடி,பாயசம் மிக்ஸ்,மற்றும் ஸ்மார்ட் செஃப் பிராண்டின் பனீர் பிங்கர், க்ரஞ்சர்ஸ்,
சீஸ் பால்ஸ்,மற்றும் கேபல்லா பிராண்ட் ஐஸ் க்ரீம் என அனைத்து வகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவடுவதாக தெரிவித்தார்..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *