விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் அருகே வசிக்கும் பழங்குடியினரிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்,குறைகளை கேட்டு அவர்கள் வசிப்பிடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் முதலில் ராம்கோ குழுமம் சார்பில் இயங்கிவரும் மலைவாழ் மக்களுக்ககான உண்டு உறைவிட பள்ளியை பார்வையிட்டு இந்த மக்களுக்கான நிர்வாகம் செய்யும் உதவிகள் குறித்து கேட்டறிந்தேன் அவர்களின் பணிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
தற்போது இவர்களின் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டேன்
35 ஆண்டுகளாக வாழ்விடத்திற்காக போராடி வருகின்றனர். இட பற்றாக்குறையால் தற்காலிக பிளாஸ்டிக் செட்டுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வனத்தில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பாக இதே இடத்தில் வாழ்வதற்கான உரிமை பெற்றவர்கள். இங்கு கிடைக்கும் தொழிலை நம்பி வாழ்கின்றனர். இவர்கள் குடியிருப்பை பராமரிக்க வனத்துறை சார்பில் ஆட்சேபம் உள்ளது. என்று கூறப்படுகிறது
அரசு சட்டங்கள் கொண்டு வந்து பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கும் போது சில மோதல்கள் ஏற்படுவது சகஜம். அவர்கள் அதே இடத்தில் வாழ்வதற்கும் வனச் சட்டங்கள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தவும் அரசிடமும், வனத்துறையிரசிடமும் பேசி தீர்வு காணப்படும் என்றார்.
ஆய்வின்போது,ஆதி திராவிட பழங்குடி நலத்துறை தாசில்தார் செந்தில்குமார்,பி.டி.ஓ., ராமமூர்த்தி, ஜெயந்த் பழங்குடியினர் விடுதி மேலாளர் முருகேசன்,காவல்துறை, மற்றும் வனத்துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.