அலங்காநல்லூர் டிசம்பர் 6
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க கிளைக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் செந்தில்குமார் , ஊராட்சி கழகச் செயலாளர் கார்த்தி,கிளைக்கழக செயலாளர் சந்திரன்,ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை,ஒன்றிய கவுன்சிலர் ரேவதி,ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் பாலமுருகன்,ஆறுமுகம்புவனேஷ், குமரேசன், ஞானசேகரன், பக்கிரி மொகம்மது,கோவில்பிச்சை, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.