மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி, திலகர் திடல் காவல் நிலையத்திற்குட்
பட்ட மதுரை ரயில்வே நிலையம் முன்பு (23.11.24) அன்று நடைபெற்ற தங்க நகை கொள்ளை சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து, 2054 கிராம் (மதிப்பு ரூ 1,47,88,800/-) தங்க நகைகள், பணம் ரூ.3,500/- மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 9 செல்போன்கள், ஆயுதம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொள்ளையர்களை விரைவாக கைது செய்து கொள்ளை யடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் முழுமையாக கைப்பற்றிய தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.
