ச. முருகவேலு தலைமை செய்தியாளர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
பெஞ்சல் புயலால் புதுவையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஏரி குளங்கள் உடைப்பெடுத்து வெள்ளநீர் மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் வயல்வெளிகளை மிகவும் பாதிப்பு உள்ளாக்கி சேதப்படுத்தி இருக்கிறது பொதுமக்கள் ஆங்காங்கே பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தொடர்ந்து உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றன

பாதிப்பு என்று கருதப்படும் இடங்களில் மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர் புயலால் சேதம் அடைந்த மின் கம்பிகள் மின் கம்பங்கள் மின் பணியாளர்களால் சீரமைக்கப்பட்டு மின்இணைப்பு கொடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறையினரும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் விமான சேவை சீரானதைத் தொடர்ந்து நேற்று இரவு அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
காலை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கத்துடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம் எல் ஏ, நெட்டப்பாக்கம் தொகுதியின் புயல் மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.
வடுகுப்பத்தில் அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மலட்டாறு கரையோர குடிசை பகுதிகள், பண்ட சோழநல்லூர் ஏரிக்கரை, பண்டசோழநல்லூர் பேட், அரசு நடுநிலைப்பள்ளி, நெட்டப்பாக்கம் ஏரி, மலட்டாறு, அறுவடைக்கு தயாராக இருந்த சேதமான வயல்வெளியை போன்றவற்றைப் பார்வையிட்டனர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நெட்டப்பாக்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன், பிரகாசம் ரெட்டியார், சேகர் ரெட்டியார், கிருஷ்ணமூர்த்தி வடுகுப்பம் ராமகிருஷ்ணன் நாயுடு, பண்டசோழன் நல்லூர் முத்துக்குமாரசாமி, பிரபாகர், ஐயப்பன், நெட்டப்பாக்கம் புருஷோத்தமன், அருள், குணா, கரியமாணிக்கம் ருக்குமணி, குணபூஷணம் உட்பட திரளாக பலர் உடன் இருந்தனர்
பண்ட சோழநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள முகாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் அவர்களுக்கு ஆறுதல் கூறி குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு உணவு வழங்கினார்