அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்கடையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, அவர்களின் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜ், கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பழைய காவல் நிலைய பேருந்து நிறுத்த பகுதியில் நகர் கழகம் சார்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், நகர இணைச் செயலாளர் புலியம்மாள், வார்டு செயலாளர்கள் பாஸ்கரன், ஆறுமுகம், பாண்டியன்,
வெள்ளைகிருஷ்ணன் வலசைகார்த்திக், மற்றும் கிளைக் கழக நிர்வாகி அய்யூர் நடராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..