திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார்,
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாற்று திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமைகள் மற்றும் நலன்களை ஊக்குவித்தல், அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் வாழ்வில் பங்குபற்றுதலை மேம்படுத்துதல், சமூகவியல் இடர்பாடுகளை நீக்குதல், அவர்களின் திறமைகளுக்கு கௌரவமளித்தல் மற்றும் சக மனிதர்களுடன் சமமான அணுகுமுறையை உறுதி செய்தல் ஆகியவை குறித்து உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி குழந்தைகள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.